ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் அம்பானி குடும்பம்

By செய்திப்பிரிவு

போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஆசிய பணக்கார குடும்பங்களின் பட்டியிலில் முகேஷ் அம்பானி குடும்பம் ரூ.2 லட்சத்து 95 ஆயிரத்து 680 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

ஆசியாவின் முதல் 10 இடத்தை பிடித்துள்ள உலக பணக்காரர்கள் பட்டிலை போர்ப்ஸ் பத்தரிக்கை வெளியிட்டுள்ளது.

இதில் இந்தியாவின் முன்னணி குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன உரிமையாளர் முகேஷ் அம்பானியின் குடும்ப சொத்து மதிப்பு ரூ.1,25,400 கோடியில் இருந்து 2,95,680 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இரண்டாவது இடத்தில், தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் எலெட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான லீ குடும்பத்தின் சொத்து ரூ.73,920 கோடி ரூபாயில் இருந்து 2,69,280 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

மூன்றாவது இடத்தில், ஹாங்காங்கை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான ஹவோக் குடும்பத்தின் சொத்து மதிப்பு 2,66,640 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நான்காவது இடத்தில் தாய்லாந்தின் சரோவனோட் குடும்பத்தின் சொத்து மதிப்பு 2,41,560 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஆசிய பணக்கார குடும்பங்களின் பட்டியலில் முதல் பத்து இடத்தில் முகேஷ் அம்பானியின் குடும்பம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

எனினும் 10-க்கும் மேற்பட்ட பட்டியலில் பல இந்திய குடும்பங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

4 mins ago

தமிழகம்

20 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

43 mins ago

விளையாட்டு

46 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

55 mins ago

க்ரைம்

53 mins ago

இந்தியா

1 hour ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

மேலும்