ஐஎஸ் வசமுள்ள கடைசிப் பகுதியை நோக்கி இராக் அரசுப் படை

By ஏஎஃப்பி

இராக்கில் ஐஎஸ்ஸின் வசமுள்ள கடைசிப் பகுதியை கைப்பற்ற அந்நாட்டு அரசுப் படை வேகமாக முன்னேறி வருகிறது.

இதுகுறித்து இராக் ராணுவத் தரப்பில், "இராக்கில் ஐஎஸ்ஸுக்கு எதிராக கடைசிக் கட்டத்தை ராணுவம் அடைந்து விட்டது. ஐஎஸ் வசமுள்ள இராக் - சிரியா எல்லையோர மேற்கு பாலைவனப் பகுதியை நோக்கி இராக் ராணுவம் முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. விரைவில் அப்பகுதி கைப்பற்றப்பட உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

இராக்கின் 2-வது மிகப்பெரிய நகரமான மோசூலை கடந்த 2014-ம் ஆண்டு ஜூனில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து அமெரிக்க படையின் உதவியுடன் மோசூலில் இராக் தொடர்ந்து ஐஎஸ் தீவிரவாதிகளிடம் போரிட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் மோசூல் நகரை இராக் அரசுப் படை கைப்பற்றியது.

இதனைத் தொடர்ந்து இராக்கில் ஐஎஸ் வசமிருந்த பிற பகுதிகளும் இராக் ராணுவத்தால் கைற்றப்பட்ட நிலையில், இராக்கில் ஐஎஸ்ஸுக்கு எதிரான போர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

தமிழகம்

27 mins ago

சினிமா

53 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்