ஹிரோஷிமா பேரழிவின் நினைவு தினம் | ''அந்த வலி என்றுமே மறக்க முடியாது ஒன்று'': ஐநா

By செய்திப்பிரிவு

ஹிரோஷிமா: கடந்த 1945-ல் இதே நாளில் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரம் நரகமாக மாறி இருந்தது. அதற்கு காரணம் ‘லிட்டில் பாய்’ எனும் அணுகுண்டை அமெரிக்கா வீசியது தான்.

அந்த கொடூர நிகழ்வு நடந்து 78 ஆண்டுகளாகி உள்ளது. அந்த பேரழிவு ஏற்படுத்திய வடு இன்றும் ஆறாமல் உள்ளது. அன்றைய தினம் காலை 08:15 மணி அளவில் அமெரிக்க நாட்டின் போர் விமானம் ‘லிட்டில் பாய்’ அணுகுண்டை ஹிரோஷிமா நகரம் மீது வீசியது. அடுத்த மூன்றாவது நாள் நாகசாகியில் ‘ஃபேட் மேன்’ அணுகுண்டை வீசியது அமெரிக்கா. இரண்டாம் உலகப்போரின் போது இந்த கொடூரம் நடந்தது.

ஹிரோஷிமாவில் மட்டும் 1.40 லட்சம் மக்களின் உயிரை பறித்தது அணுகுண்டு. அந்த குண்டின் தாக்கம் நகரின் சில கிலோ மீட்டர் தூரம் வரை இருந்தது. குண்டு வெடித்ததால் ஏற்பட்ட தீப்பிழம்பு பல ஆயிரம் அடிகளுக்கு மேல் எழுந்திருந்தது. உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் எண்ணிக்கையை முறையாக கணக்கிட ஜப்பானுக்கு சில மாதங்கள் தேவைப்பட்டது. வீசப்பட்டது அணுகுண்டு என்பதே குண்டு வீசப்பட்ட 16 மணி நேரத்துக்கு பின்னர் தான் தெரிந்தது.

அந்த போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஜப்பான், இன்று மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உயர்ந்து முன்னேற்றம் கண்டுள்ளது. இதற்கெல்லாம் காரணம் அனைத்திலும் அந்த நாடு புதுமையை கடைப்பிடித்து வருவது தான்.

“78 ஆண்டுகளுக்கு முன்பு, ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டது. அந்த வலி என்றுமே மறக்க முடியாது ஒன்று. ஹிரோஷிமா மக்களின் பக்கம் நான் நிற்கிறேன். அணு ஆயுதங்கள் மீண்டும் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய அயராது உழைக்கிறோம்” என ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் ட்வீட் செய்துள்ளார். ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், ஹிரோஷிமா நினைவு தினத்தை முன்னிட்டு ட்வீட் செய்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

14 mins ago

இந்தியா

20 mins ago

தமிழகம்

27 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

29 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

5 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்