ஜப்பானிய கடற்கரையில் வடகொரியர்கள்: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்

By ஐஏஎன்எஸ்

வடகொரியாவிலிருந்து படகில் ஜப்பான் அகிடா கடற்கரைக்கு சுமார் 8 பேர் வந்திறங்கியந்தையடுத்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்துக் காவல்துறை தரப்பில் கூறும்போது, ''யுரிஹோஞ்சோ நகரத்தில் வியாழக்கிழமை இரவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கிருந்த வட கொரியர்கள் அனைவரும் உடனடியாக காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வட கொரியர்கள் யார் என்ற தகவலைத் தெரிந்துகொள்வதற்காக கொரிய மொழிபெயர்ப்பாளர் ஒருவரை அழைத்து வந்திருக்கிறோம். அவர்கள் அனைவரும் ஜப்பானில் தங்கும் எண்ணத்தில் இருந்தார்களா அல்லது வட கொரியா திரும்பிப் போக முயற்சித்தார்களா என்பது தெரியவில்லை'' என்றனர்.

வட கொரிய மீன்பிடி படகுகள் ஜப்பானிய எல்லைக்குள்ளோ, கடற்கரைப் பகுதியிலோ நுழைவது இது முதல் முறை அல்ல.

முன்னதாக 2011-ல் வட கொரியாவில் இருந்து தென் கொரியா செல்ல முயன்ற வட கொரியர்கள் 9 பேர் ஜப்பானில் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

4 mins ago

இந்தியா

40 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்