பொருளாதாரத் தடைகளிலிருந்து இந்தியா மீண்டு வருகிறது: அருண் ஜேட்லி

By செய்திப்பிரிவு

பொருளாதாரத் தடைகளில் இருந்து மீண்டு வருகிறது என நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாள்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது:

''இந்தியாவில் வேகமான பொருளாதார மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆதார் எண், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி என, அடுத்தடுத்து மூன்று பொருளாதார சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் வெளிப்படையான பொருளாதாரமும், ரொக்கமில்லா பண பரிவர்த்தனையும் சாத்தியமாகியுள்ளது. அரசின் வரி வருவாயும் உயர்ந்து வருகிறது.

அதுபோலவே கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டு அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பொருளாதார சீர்திருத்தங்களால் உரிய பலன் கிடைத்து வருகிறது. இந்திய பொருளாதாரம் தடைகளில் இருந்து மீண்டு வருகிறது. முதலீடுகள் அதிகரித்து வருகிறது.

உலக அளவில் எளிமையாக தொழில் செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 30 இடங்கள் முன்னேறி 100-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் வலுவான பொதுத்துறை நிறுவனங்களும், வங்கிகளும் உள்ளன. பல்வேறு துறைகளில் முதலீடு வாய்ப்பு அதிகரித்து வருகிறது. சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும்'' எனக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்