வடகொரியா மீது சீனா உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ட்ரம்ப்

By ஏஎஃப்பி

வடகொரியாவின் அணுஆயுத அச்சுறுத்தல்களை தவிர்க்க உடனடி நடவடிக்கையை சீனா எடுக்க வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 11 நாட்கள் ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இந்தப்பயணத்தில் ஜப்பான், தென் கொரியா, சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு ட்ரம்ப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதில் ஜப்பான், தென்கொரியா, ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ட்ரம்ப் தற்போது சீனாவுக்கு சென்றிருக்கிறார்.

அங்கு கம்யூனிஸ்ட் கட்சியின் புகழ்மிக்க கிரேட் ஹாலில் ஆயிரக்கணக்கான சீன மக்களிடையே ட்ரம்ப் உரையாற்றினார்.

ட்ரம்பின் ஜப்பான், வட கொரியா சுற்றுப்பயணத்தில் வடகொரியாவின் அணுஆயுத சோதனைகளே முக்கிய அங்கம் பெற்றன.

இந்த நிலையில் வடகொரியாவின் அணுஆயுத அச்சுறுத்தல்களை தவிர்க்க சீனா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அதில் ட்ரம்ப் பேசும்போது, நேரம் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நாம் வேகமாக செயல்பட வேண்டும். வடகொரியாவின் அச்சுறுத்தல்களை தடுக்க சீனா உடனடி நடவடிக்களை எடுக்க வேண்டும். பிற நாடுகளைக் காட்டிலும் சீனா இதில் சிறப்பாக செயல்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்