உலக மசாலா: கொஞ்சம் நம்புகிற மாதிரி சொல்லலாமே ஜான்!

By செய்திப்பிரிவு

ரிசோனாவில் உள்ள பாலைவனப் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது ஸ்டார்டஸ்ட் பண்ணை. இதில் 3,436 சதுர அடியில் நீச்சல் குளத்துடன் கூடிய ஒரு வீடும் உள்ளது. இந்தப் பண்ணையின் உரிமையாளர் ஜான் எட்மண்ட்ஸ் இங்கே வசித்து வருகிறார். “கடந்த 20 ஆண்டுகளாக நானும் என் மனைவியும் வேற்று கிரகவாசிகளுடன் போராடி அலுத்துவிட்டோம். பலமுறை வேற்று கிரகவாசிகள் என்னை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கின்றனர். என் மனைவியைத் துன்புறுத்தியிருக்கின்றனர். நாங்கள் இங்கே வந்ததிலிருந்தே விசித்திரமான அனுபவங்களைப் பெற ஆரம்பித்தோம். ஒருமுறை கட்டிலில் படுத்திருந்த என் மனைவியை ஒரு கூம்பு வடிவ ஒளி இழுத்துச் சென்றது. நான் அதைத் துப்பாக்கியால் சுட்டு என் மனைவியைக் காப்பாற்றினேன். இதுவரை 18 வேற்று கிரகவாசிகளை என் சாமுராய் வாளால் வெட்டிக் கொன்றிருக்கிறேன். வெட்டியவுடன் அந்த உடல்கள் மாயமாக மறைந்து விடுவதால் இதுவரை என்னிடம் பிறருக்கு நம்பிக்கையளிக்கும்படியான ஆதாரத்தைக் காட்ட முடியவில்லை. ஆனால் என் கைகளில் அவை ஏற்படுத்திய காயங்கள் இருக்கின்றன. இவ்வளவு பிரச்சினைகளுக்குப் பிறகும் நான் ஏன் இன்னும் இங்கே இருக்கிறேன் என்றால், இந்த இடத்துக்காக நிறைய பணமும் நேரமும் செலவிட்டிருக்கிறேன். இனிமேலும் இருக்க முடியாது என்பதால் நல்ல விலைக்கு விற்றுவிட்டு, நிம்மதியாக வேறு இடத்துக்குச் செல்ல இருக்கிறேன்” என்கிறார் ஜான் எட்மண்ட்ஸ். சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த இடம், வேற்று கிரகவாசிகள் வரும் இடம் என்பதால் 32 கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டது!

கொஞ்சம் நம்புகிற மாதிரி சொல்லலாமே ஜான்!

மெரிக்காவிலுள்ள ப்ளைமவுத் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் இரண்டாம் ஆண்டு மாணவியாக இருக்கிறார் 19 வயது அனோக் யாய். கடந்த வாரம் வாஷிங்டனில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கான விழாவில் அனோக்கும் கலந்துகொண்டார். அப்போது இவரை விதவிதமாக ஒளிப்படங்கள் எடுத்து, அவருடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் ஒரு புகழ்பெற்ற ஒளிப்படக் கலைஞர். ஒளிப்படங்களின் கீழே, ‘நான் அந்த விழாவில் அற்புதமான ஒரு பெண்ணைச் சந்தித்தேன்’ என்று எழுதி அனோக் பெயரையும் குறிப்பிட்டிருந்தார். திடீரென்று அந்தப் படங்கள் வைரலாகின. “நாங்கள் எகிப்தில் இருந்து 17 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா வந்தோம். எனக்கு ஃபேஷன் மீது ஆர்வம் அதிகம். மாடலிங் செய்ய வேண்டும் என்பது என் கனவு. ஆனால் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்ததே இல்லை. என்னுடைய 2 படங்களுக்கும் ஏராளமான வரவேற்பு!. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 11 ஆயிரத்துக்கும் மேல் லைக் செய்திருந்தார்கள். என் போன் இடைவிடாமல் நீண்ட நேரம் அலறிக்கொண்டே இருந்தது. முதலில் யாரோ என் படங்களை வைத்து மீம் உருவாக்கிவிட்டதாகத்தான் நினைத்தேன். பிறகுதான் உண்மையிலேயே என் படங்களை அங்கீகரித்திருக்கிறார்கள் என்று அறிந்தேன். இந்தப் படங்களைப் பார்த்து மிகப் பெரிய மாடலிங் நிறுவனங்கள் என்னை ஒப்பந்தம் செய்துகொள்ள அணுகியுள்ளன. என்னால் இன்னும் கூட இதை நம்ப முடியவில்லை!” என்கிறார் அனோக் யாய்.

அழகு, நிறம் பற்றிய கற்பிதங்கள் மாறிவருவது ஆரோக்கியமானது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

16 mins ago

சினிமா

37 mins ago

இந்தியா

40 mins ago

வணிகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்