அமெரிக்க தூதரகத்தை சிறைபிடித்த நினைவு நாளில் ஏவுகணையை காட்சிப்படுத்திய ஈரான் அரசு

By செய்திப்பிரிவு

ஈரானில் அமெரிக்க தூதரகம் சிறைபிடிக்கப்பட்ட நினைவு நாளில், அதிநவீன ஏவுகணையை முதல்முறையாக காட்சிப்படுத்தியது ஈரான் அரசு.

ஈரான் அரசு ஏவுகணை மற்றும் அணுஆயுத ஆய்வுகளை நடத்தி வருவதாக அமெரிக்கா உட்பட பல நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதை ஈரான் அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. எனினும், பல நாடுகள் ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளன. இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு ஈரானுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.

கடந்த 1979-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதி டெஹ்ரானில் உள்ள அமெரிக்க தூதரகத்தை கிளர்ச்சிப் படையினர் கைப்பற்றினர். அமெரிக்க தூதர்கள், அதிகாரிகள் உட்பட 52 பேரை கிளர்ச்சியாளர்கள் சிறை பிடித்தனர். அவர்களை விடுவிக்க அமெரிக்க அரசு முயன்றது. ஆனால், 444 நாட்களுக்குப் பிறகுதான் பேச்சுவார்த்தை மூலம் அமெரிக்க தூதரத்தையும், தூதரக அதிகாரிகளும் விடுவிக்க முடிந்தது.

இந்நிலையில், தூதரகம் சிறைபிடிக்கப்பட்ட ஆண்டு நினைவு நாளான நேற்று டெஹ்ரானில் அமெரிக்க தூதரகம் இருந்த அந்த பழைய கட்டிடத்தின் முன் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அப்போது, தரையில் இருந்து பாய்ந்து சென்று தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணையை ஈரான் காட்சிப்படுத்தியது. இந்த ஏவுகணை 2000 கி.மீ. பாய்ந்து இலக்கை தாக்கும் திறன் படைத்தது என்று கூறப்படுகிறது. தூதரகம் சிறைபிடிக்கப்பட்ட நினைவு நாளில் ஏவுகணையை ஈரான் காட்சிப்படுத்தியது இதுவே முதல் முறை.- ஏபி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்