ஏமனில் சவுதி ஆக்கிரமிப்புகளை உடனடியாக நீக்க வேண்டும்: மனித உரிமை அமைப்புகள்

By கார்டியன்

ஏமனில் சவுதி தனது ஆக்கிரப்புகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தென் மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியாவும் ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

இந்த நிலையில் கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதங்கள் வழங்குவதை தடை செய்யும் வண்ணம் ஏமன் எல்லைகளை சவுதி முடக்கியுள்ளது. இதன் காரணமாக உள் நாட்டுப் போர் காரணமாக எல்லையோரத்தில் தங்கியுள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் காலரா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்களுக்கு உதவ முடியாத சூழல் உருவாகியுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து சர்வதேச மனித உரிமை அமைப்பு, ''ஏமனில் நடைபெற்றுவரும் உள் நாட்டுப் போர் காரணமாக ஒவ்வொரு நாளும் பசியாலும், நோயாலும் நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் இறந்து வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் முதல் காலரா நோய்க்கு 2,000க்கும் அதிகமான குழந்தைகள் இறந்துள்ளனர். மேலும் எல்லை புறத்தை சவுதி முடக்கியுள்ளதால் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏமனில் சவுதி மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக நீக்க வேண்டும்'' என்று கூறியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

கல்வி

15 mins ago

இந்தியா

18 mins ago

க்ரைம்

30 mins ago

சினிமா

35 mins ago

இந்தியா

48 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இலக்கியம்

6 hours ago

இலக்கியம்

6 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்