அமெரிக்காவிடமிருந்து விலகி இருங்கள்: ஆஸ்திரேலியாவுக்கு வடகொரியா எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

அமெரிக்காவிடமிருந்து ஆஸ்திரேலியா விலகி இருக்குமாறு  அந்நாட்டுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலியா அரசு தரப்பில், "வடகொரியாவிடமிருந்து  ஒரு பக்கம் அளவில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடமிருந்து எங்களை தள்ளியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என்று கூறப்பட்டுள்ளது.

வடகொரியாவின் இந்தக் கடிதம் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர்  மால்கம் டர்ன்புல் கூறும்போது, "வடகொரியாவிடமிருந்து அனுப்பட்ட கடிதத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கொடூரமான மற்றும் பொறுப்பற்ற நகர்வுகளிருந்து ஆஸ்திரேயாவை விலகி இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.

ஆனால் எங்களைப் பொறுத்தவரை வடகொரியாதான்  ஜப்பான், தென் கொரியா, அமெரிக்காவில் அணுஆயுத ஏவுகணை செலுத்துவோம் என்று பயத்தை உருவாக்கி ஒருவித பதற்றம் ஏற்படக்  காரணமாக உள்ளது."என்றார்

ஐ.நா. சபை எச்சரிக்கையையும் மீறி அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் வடகொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கொரிய தீபகற்பத்தில் தென்கொரிய கடற்படையும் அமெரிக்க கடற்படையும் இணைந்து தீவிர போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றன.

அமெரிக்கா எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத வகையில் அந்த நாட்டின் மீது  தாக்குதல் நடத்துவோம் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

16 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

54 mins ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்