இன்று என்ன நாள்?- பெண்களுக்காக மருத்துவரான ஐடா

By செய்திப்பிரிவு

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஐடா சோபியா ஸ்கடர். 1870-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி பிறந்தவர். இவரது பெற்றோர் ராணிபேட்டையில் தங்கி மருத்துவம் பார்த்து வந்தனர். ஆனால், ஆண்களிடம் பிரசவம் பார்க்க பெண்கள் மறுத்த காலம் அது. அதனால் 3 பெண்கள் பிரசவத்தின் போது இறந்ததைப் பார்த்து, இந்தியப் பெண்களுக்காகவே மருத்துவம் படித்தார்.

அதன்பின், 1900-ம் ஆண்டு பெண்களுக்கான மேரி டேபர் ஷெல் நினைவு மருத்துவமனையைத் தொடங்கினார். பின்னர் 1908-க்குப் பிறகு செவிலியர் பயிற்சி பள்ளியைத் தொடங்கினார். பெண்களுக்கென ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கவேண்டு என்ற ஐடாவின் எண்ணத்தை, தென்னிந்திய மிஷனரி மன்றம் ஏற்றுக்கொண்டது. அப்படி தொடங்கப்பட்ட யூனியன் மருத்துவப் பள்ளி, கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியாக (சிஎம்சி) தரம் உயர்த்தப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

51 secs ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

7 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்