இன்று என்ன? - ஓட்ட நாயகன் போல்ட்

By செய்திப்பிரிவு

உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் மூன்று முறை தங்கப் பதக்கங்கள் வென்றவர் உசைன் போல்ட். இவர் ஜமைக்காவில் ட்ரெலானி பாரிஷ் கிராமத்தில் 1986 ஆகஸ்ட் 21-ம் தேதி பிறந்தார். இளம்வயதில் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளராக இருந்தார்.

உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் 2002-ல் தடகள வீரராக பங்கேற்றார். உலக சாம்பியன்ஷிப் போட்டி 2008-ல் 9.76 வினாடிகள் ஓடினார். பின்னர் நியூயார்க் நகரில் உலக சாம்பியனான டைசன் கே சாதனையை முறியடிக்கும் விதமாக 9.72 வினாடிகள் ஓடி முடித்தார்.

2011 உலக சாம்பியன்ஷிப் ஸ்பிரிண்ட் போட்டியில் 100 மீட்டர் இறுதிப் போட்டியில் கிளாப் அடிக்கும் முன்பே ஓட தொடங்கியதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 2013-ல் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார்.

டி ஜெனிரோ 2016 ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார். உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் சிறந்த ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட் 2017 உலக சாம்பியன்ஷிப்பிற்குப் பிறகு தடகளத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

16 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

48 mins ago

வாழ்வியல்

57 mins ago

தமிழகம்

51 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

2 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்