நீலகிரியில் 63 பள்ளிகளில் 3,415 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி

By ஆர்.டி.சிவசங்கர்

உதகை: நீலகிரி மாவட்டத்தில் முதற்கட்டமாக 63 பள்ளிகளில் 3,415 மாணவர் களுக்கு காலை சிற்றுண்டி வழங் கப்படவுள்ளது.

அரசுபள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் வரும் 15-ம் தேதி முதல் செயல்படுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் கூறியதாவது:

அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கும் நோக்கிலும், ஊட்டச்சத்து நிலையை உயர்த்தவும், ரத்தசோகை குறைபாட்டை நீக்கவும், பள்ளிகளில் குழந்தைகளின் வருகையை அதிகரிக்கவும், பணிக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைக்கும் நோக்கிலும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.

அட்டவணைப்படி...

முதற்கட்டமாக நீலகிரி மாவட்டம்கூடலூர் ஊராட்சி ஒன்றியத்துக் குட்பட்ட 63 பள்ளிகளில் பயிலும் 3,415 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும். காலை உணவு சமைக்கப் பயன்படுத்தப்படும் சமையல் பொருட்கள் தரமானதாவும் சுத்தமானதாகவும் இருக்க வேண்டும்.

தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் சுகாதாரமாகவும், தரமான தாகவும் அட்டவணைப்படி உணவு தயாரித்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். தினசரி உணவு இருப்புகளின் பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும் என சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வப்போது ஆய்வு

உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் அவ்வப்போது பள்ளிகளைஆய்வு செய்யவும் வலியுறுத்தப்பட் டுள்ளது. குழந்தைகளுக்கு உணவு வழங்கும் முன்பு பள்ளி மேலாண்மை குழு ஒவ்வொரு நாளும் உணவின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

36 mins ago

உலகம்

57 mins ago

வாழ்வியல்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

மேலும்