ஆயிரம் ஜன்னல் வகுப்பறை 11: திட்டமிடல் இருந்தால் போதும்

By ‘கலகல வகுப்பறை’ ரெ.சிவா

வகுப்பறையில் நான் அதிக நேரம் பேசிக் கொண்டே இருக்கிறேனா? என்ற கேள்வி அடிக்கடி எழுவது தான். அதன் விளைவாகவே கலந்துரையாடல்களில் கவனம் வைத்தேன். கலந்துரையாடலை நெறிப்படுத்தும் போதும் நானே பேசுவதை உணர்ந்ததும் மாணவருள் ஒருவரையே நெறியாளராக ஆக்குவது வழக்கமானது.பொதுவான செய்திகள், வரலாறு என்று பாடங்களைத் தாண்டிச் செல்லும் போது மாணவர்கள் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது. அதனாலேயே நீண்ட நேரம் பேச வேண்டிய நிலை உருவாகிறது. அது நல்லது தானே என்று இத்தனை ஆண்டு காலமும் சொல்லிக் கொண்ட ஆறுதலையும் மீறி இப்போது இக்கேள்வி மீண்டும் எழுந்திருக்கிறது. கவனித்தல் குறித்த பரிசோதனைக்குப் பிறகு இக்கேள்வி அதிக வலுவடைந்திருக்கிறது என்பது புரிந்தது.

இன்றைய சூழலில் மாணவர்களுக்கு ஏற்றபடி வகுப்பறைச் செயல்பாடுகளில் மாற்றம் அவசியம். அப்போதுதான் முழுமையாகக் கவனிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். யாராவது சிலர் கவனிப்பார்கள் என்று சமாதானம் சொல்லிக் கொள்வதை விட்டு விட வேண்டும். வகுப்பறையில் ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து பேசக்கூடாது என்று தோன்றியது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்