நீங்க ‘பாஸ்' ஆக வேண்டுமா? - 14: பூவில் சிறந்த பூ எது?

By இரா.வினோத்

தலைமை ஆசிரியர் சத்தியநாதன் ஒருமுறை வகுப்பு தலைவர்களின் கூட்டத்தில், பூக்களில் சிறந்த பூ எது என்று கேட்டார். ஒருவ‌ர் ரோஜாப்பூ என்றும், மற்றொருவர் மல்லிப்பூ என்றும் சொன்னார்கள். அதற்கு தலைமை ஆசிரியர், நீங்கள் சொன்ன பூக்கள் எல்லாம் இன்றைக்கு அழகாக இருக்கும். மாலையே வாடி, நாளைக்கே காய்ந்து, பயனற்று போய்விடும். நான் கேட்பது என்றென்றும் பயன் தரும் பூ என க்ளு கொடுத்தார். உடனே ஒரு மாணவி எழுந்து, சிரிப்பூ என சொல்லிவிட்டு சிரித்தார். சிரிப்பு உடலுக்கு நல்லதுதான். ஆனால், அதனை விடவும் சிறந்த பூ ஒன்று இருக்கிறது. அது இருந்தால் தான் சிரிப்பே வரும். அது என்ன பூ என்றார் தலைமை ஆசிரியர்.

எல்லோரும் தலையை சொறிந்து கொண்டிருக்க அவரே பதிலை சொன்னார். பூவில் சிறந்த பூ சேமிப்'பூ’. ஒவ்வொருவரும் மனதில் கட்டாயம் சூட வேண்டிய பூ சேமிப்பூ. இந்த பூ என்றுமே வாடாது. நாளாக நாளாக மலர்ந்து கொண்டே இருக்கும். என்றுமே அதன் அழகு நீங்காது. நீங்கள் தூங்கினாலும், அது தூங்காமல் உங்களுக்காக வேலை செய்யும். நீங்கள் மறந்துவிட்டாலும், அது உங்களை மறக்காமல் மாதாமாதம் உங்களுக்கு சம்பளம் தரும். இவ்வாறு சேமிப்பின் மூலம் கிடைக்கும் பலன்தான் வட்டி. இந்த வட்டியை மீண்டும் சேமித்து கொண்டே போனால் உங்களின் அசலைவிட பன்மடங்கு பலன் கிடைக்கும். எனவே பூவில் சிறந்த பூ சேமிப்பூ' என விளக்கினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

இந்தியா

14 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

26 mins ago

இந்தியா

32 mins ago

சுற்றுச்சூழல்

42 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வணிகம்

9 hours ago

மேலும்