உயர் கல்விக்கு திறவுகோல் 01: பேஷன் டெக்னாலாஜி படிக்க ‘நிஃப்ட்’ நுழைவுத் தேர்வு

By எஸ்.எஸ்.லெனின்

உயர்கல்வியில் உயர்ந்தவை மருத்துவம், பொறியியல் மட்டுமே அல்ல அவற்றுக்கு அப்பால் கடலளவு வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அத்தகைய உயர்கல்விக்கு நுழைவாயிலாகும் பல்வேறு நுழைவுத் தேர்வுகளை முன்வைத்து தேவையான வழிகாட்டுதலை வழங்கும் பகுதி இது.

நுழைவுத் தேர்வு: NIFT - 2020

என்ன படிக்கலாம்?

ஐ.ஐ.டி. பொறியியல் கல்விக்கு இணையான மதிப்புள்ள Bachelor of Fashion Technology, Bachelor of Design என 2 இளநிலை பட்டப் படிப்புகளைப் படிக்கலாம்.

எங்கே படிக்கலாம்?

தேசிய ஆடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (National Institute of Fashion Technology) என்பது மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்நிறுவனங்கள் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு உட்பட நாட்டின் 16 முக்கிய நகரங்களில் அமைந்துள்ளன. இந்த கல்வி நிறுவனங்களின் 2370 இருக்கைகளுக்காக தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நடைபெறு கிறது.

எங்கே வேலை?

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இன்று அதிக ஊதியம் தரும் வேலைவாய்ப்பாக ஃபேஷன் டெக்னாலஜி உள்ளது. ஆடை அணிகலன்கள் வடிவமைப்பு, உற்பத்தி, ஏற்றுமதி ஆகியவற்றில் உள்ள பல பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. படித்த படிப்புடன் படைப்பாற்றலும், புதியன கற்றுக்கொள்ளும் ஆர்வமும் கொண்டவர்கள் இந்த துறையில் சாதிக்கலாம்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

பிளஸ் 2-வில் இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களுடன் தேர்ச்சி பெற்றவர்களும், பொறியியல் பட்டயப் படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 23-க்கு உட்பட்டிருக்க வேண்டும்.

நுழைவுத் தேர்வு எப்படி?

சென்னை, மதுரை, கோவை உட்பட நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். பேச்சுலர் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி விண்ணப்பித்தவர்கள் GAT- General Ability Test தேர்வையும், பேச்சுலர் ஆஃப் டிசைன் படிப்புக்கு விண்ணப்பித்தவர் கள் கூடுதலாக CAT – Creative Ability Test தேர்வையும் எழுத வேண்டும். கூடுதலாக, Quantitative ability, Communication ability, English comprehension, Analytical ability and logical ability, General knowledge and current affairs ஆகிய தலைப்புகளில் தயாராக வேண்டும்.

எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?

தேசிய ஆடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இணையதளம் (nift.ac.in/) வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். தனிபயனர் கணக்கை உருவாக்கியப் பின்னரே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 2000; எஸ்.சி. எஸ்.டி. மாணவர்களுக்கு ரூ.1000. விண்ணப்ப நடைமுறைகள் அக்டோபர் இறுதி வாரத்தில் அறிவிக்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் நான்காவது வாரத்தில் அமையும்.

எஸ்.எஸ்.லெனின்

மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் கதை, கவிதை, ஓவியம், ஒளிப்படம், நகைச்சுவைத் துணுக்குகள் வரவேற்கப்படுகின்றன.

உடன் மாணவரின் புகைப்படம், பள்ளி முதல்வர்/ தலைமையாசிரியர் கையெழுத்திட்ட சான்றிதழை அனுப்புங்கள்.

மின்னஞ்சல்: vetricreations@hindutamil.co.in

அஞ்சல் மூலம் கடிதம் அனுப்ப: ஆசிரியர் இலாகா,
இந்து தமிழ் திசை, வெற்றிக் கொடி, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 2.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

இந்தியா

2 mins ago

இந்தியா

35 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

3 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்