வெள்ளித்திரை வகுப்பறை 24: உங்கள் லியோவை கண்டுபிடியுங்கள்!

By ‘கலகல வகுப்பறை’ ரெ.சிவா

லியோவை வார இறுதியில் யார் எடுத்துப் போகிறீர்கள்? என்று ஆசிரியை கேட்கிறார். நானே எடுத்துச் செல்கிறேன் என்று சம்மர் கூறுகிறாள். ஒருவரே இரண்டு முறை எடுத்துச் செல்லக்கூடாது என்று ஆசிரியை கூறுகிறார். நான் எடுத்துப்போகிறேன் என்று ஈலே என்ற சிறுவன் சொல்கிறான். ஈலேவின் பெற்றோர் அவனைப் பாதுகாப்பதில் அளவுக்கு அதிகமான கவனம் உள்ளவர்கள். செயற்கை நுண்ணறிவு உள்ளபறக்கும் இயந்திரத்தை அவனுக்குப் பாதுகாப்பாக வைத்திருக் கிறார்கள். சாப்பிடும்போது வாயைத் துடைப்பது, முடி சிறிது கலைந்தாலும் சீவுவது என அவன் கூடவே இருக்கிறது அந்த இயந்திரம். அதனால் தனியாக விரும்பியதைச் செய்ய முடியாத வருத்தம் ஈலேக்கு எப்போதும் உண்டு.

பிறந்தநாள் விழா: வழக்கம் போல லியோ, ஈலேவுடன் பேசியதும் அவன் மகிழ்கிறான். பெற்றோர் அவனுக்காக நேரம் செலவழிக்காமல் இயந்திரத்தை வைத்திருப்பது குறித்துவருந்துகிறான். லியோ அவனுக்கு ஆறுதல் கூறுகிறது. உன் நிலையை விளக்கி அந்த இயந்திரத்திற்கு ஒரு கடிதம் எழுது என்றும் கூறுகிறது. ஈலே மகிழ்கிறான். கடிதம் எழுதிக் கொடுக்கிறான். லியோவோடு விளையாடி மகிழ்கிறான். லியோ இந்த வாரமும் பள்ளிக்குத் திரும்பிவிட்டது. வார இறுதி. லியோவை எடுத்துச் செல்வதில் சம்மரும் ஈலேவும் ஆர்வம் காட்டுகிறார்கள். புதியவர் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதால் ஜேடா என்ற சிறுமி லியோவை எடுத்துச் செல்கிறாள். அந்த வார இறுதியில் அவளுக்குப் பிறந்த நாள். வகுப்பிலிருந்து ஓரிருவரை மட்டும் ரகசியமாக அழைத்திருந்தாள். ஜேடாவின் அப்பா மருத்துவர். மிகவும் வசதியான குடும்பம். லியோ அவளோடு பேசுகிறது. எல்லோரும் தனித்தன்மையானவர்கள். அனைவரையும் சமமாக மதிக்க வேண்டும் என்று ஜேடா உணர்ந்து கொள் கிறாள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

9 mins ago

சினிமா

3 hours ago

ஓடிடி களம்

30 mins ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

வாழ்வியல்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்