வெள்ளித்திரை வகுப்பறை 23: குழந்தைகளை கவனிக்கும் கண்கள்

By ‘கலகல வகுப்பறை’ ரெ.சிவா

தொடக்கப் பள்ளிக் குழந்தைகள். அதுவும் ஐந்தாம் வகுப்புக் குழந்தைகள். பள்ளியிலேயே மூத்த வகுப்பு என்ற பெருமிதத்தோடும் ஆர்வத்தோடும் பள்ளிக்குக் கிளம்புகிறார்கள். பள்ளிக்கூடம். ஆசிரியை சிரித்தமுகத்துடன் குழந்தைகளை வரவேற்றுக் கொண்டு இருக்கிறார். சின்ன வகுப்புக் குழந்தைகள் துள்ளிக்குதித்து ஓடிக் கொண்டு இருக்கிறார்கள். ஐந்தாம் வகுப்பு. வகுப்பறையை நிறைக்கத் தொடங்கும் குழந்தைகளின் சத்தம். ஆசிரியை சாலினாஸ் வருகிறார். குழந்தைகளை அன்போடு வரவேற்கிறார். இந்த ஆண்டில் நிறைய செயல்பாடுகள் இருக்கின்றன. அவற்றுள் நமது வகுப்பு முதலிடம் பெற்றால் ஒரு அருமையான பரிசு காத்திருக்கிறது. முதலிடம் பெறும் வகுப்புக் குழந்தைகள் அனைவரும் ஒருநாள் 'மேஜிக் லேண்ட்' என்ற பொழுதுபோக்குப் பூங்காவுக்குச் சுற்றுலா செல்லலாம் என்று கூறுகிறார். குழந்தைகளின் ஆரவாரம். 'மிஸ். சாலினாஸ் குழந்தைகளை நல்லா மோட்டிவேட் பண்றாங்க" என்று ஒருவர் சொன்னதும் மற்றவர், "ஆமாம். 1960-ம் ஆண்டு மிஸ் பெல்லாகி இவங்களை விடக் கில்லாடி" என்று கூறுகிறார்.

லியோ அனிமேஷன்: இப்படி வகுப்பறை நிகழ்வுகளைத் தொடர்ந்து யாராவது கவனித்துக் கொண்டு இருந்தால் எப்படி இருக்கும்? இப்படியான கற்பனையின் அனிமேஷன் வடிவமே 'லியோ' என்ற திரைப்படம். பலஆண்டுகளாக வகுப்பறையைக் கவனித்தவர்கள், லியோ என்று செல்லமாக அழைக்கப்படும் பழமையான ஒரு வகைப் பல்லி மற்றும் அதன் நண்பனான ஆமை. இருவரும் ஐந்தாம் வகுப்பில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள். இந்த இருவரும் நமது மொழியில் பேசினால் எப்படி இருக்கும்? கூடுதல் கொண்டாட்டம் தானே! பள்ளியில் பெற்றோர் கூட்டம். ஐந்தாம் வகுப்பு ஆசிரியை சாலினாஸ் சில மாதங்கள் பிரசவத்திற்காக விடுப்பில் செல்லவிருப்பதாகவும் அவருக்குப் பதிலி ஆசிரியையாக மிஸ். மால்கின் இருப்பார் என்றும் முதல்வர் அறிவிக்கிறார். பெற்றோர்களுக்கு அதிருப்தி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

50 secs ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மாவட்டங்கள்

2 hours ago

சினிமா

2 hours ago

மாவட்டங்கள்

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

5 hours ago

மேலும்