முறையாக கைகளை கழுவுவது எப்படி? - மாநகராட்சி சார்பில் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

By செய்திப்பிரிவு

முறையாக கைகளை கழுவுவது எப்படி?என்பது குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் அரசு பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

உலக சுகாதார நிறுவன அறிக்கை யின்படி முறையாக சோப்பு உபயோ கித்து கைகழுவுவதன் மூலம் 50 சதவீத வயிற்றுப் போக்கு, 25 சதவீதம் நிமோனியா காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல், மஞ்சள் காமாலை, சாதாரண சளித்தொல்லை, சுவாச தொற்று நோய் கள், பன்றிக் காய்ச்சல், காலரா, வயிற் றுப்பூச்சிகள், தோல் மற்றும் கண் சம்பந் தப்பட்ட நோயில் இருந்து பொது மக்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். பொதுவாக தண்ணீரை மட்டும் பயன்படுத்தி கைகளைக் கழுவுவதால் மட்டும் நோய்க் கிருமிகளை அழிக்க முடியாது. சோப்பு உபயோகித்து 20 நொடிகள் முறைப்படி கழுவுவதால் நோய்க் கிருமிகளை அழிக்க முடியும்.

இந்நிலையில், பெருநகர சென்னைமாநகராட்சி சார்பில் போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், முறையாக கை கழுவும் பயிற்சி மற்றும்பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்ப்பு குறித்தவிழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், மாணவிகளுக்கு முறை யாக சோப்பு உபயோகித்து கைகழுவ செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து மாணவிகள் அனை வரும் முறையாக சோப்பு பயன்படுத்தி கைகழுவினர்.

மேலும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தக் கூடிய மக்காத பிளாஸ்டிக் பொருட் களான பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் கைப்பைகள் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் சுகாதார கேடுகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பின்னர் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தக் கூடிய பாக்கு மரத்தட்டுகள், துருப்பிடிக்காத எஃகு தட்டுகள், துணிப்பைகள், சணல் பைகள், கண்ணாடி குவளைகள், காகித உறிஞ்சு குழல்கள், துருப் பிடிக்காத எஃகு பாட்டில்கள் போன் றவை கண்காட்சியில் வைக்கப்பட்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிறைவாக, மாணவிகள் அனைவரும் நோய் தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு முகாமில் மாநகராட்சி சுகாதார கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன், முதன்மை கல்விஅதிகாரி வி.வெற்றிச்செல்வி, உதவிஇயக்குநர் ராஜசேகர், மாவட்ட கல்விஅதிகாரி ஆர்.அண்ணாதுரை, பள்ளியின் தலைமை ஆசிரியை ஜி.கமலாராணி உள்பட 1500 மாணவிகளும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

மேற்கண்ட தகவலை பெருநகரசென்னை மாநகராட்சி தெரிவித் துள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

32 mins ago

ஜோதிடம்

35 mins ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்