புகையில்லா போகி குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

By செய்திப்பிரிவு

புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி சார்பில் புகையில்லா போகி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சூளைமேடு ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.

அப்போது டயர், டியூப், பிளாஸ்டிக் போன்றவற்றை எரிப்பதால் சுற்றுச்சூழலுக்கும் உடல்நலத்துக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக உபயோகப்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

புகையில்லா போகியை கொண்டாடுவோம் என்று மாணவிகள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும், சுற்றுச்சூழல் துறையின் ஒத்துழைப்புடன் எனது பள்ளி, எனது மரம் திட்டத்தின்கீழ் பள்ளியில் மரங்கள் வளர்த்து பாதுகாத்த 50 மாணவிகளுக்கு ஊக்கத்தொகையும், பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி சுகாதார கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன், பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஜி.தங்கராஜ், தலைமை ஆசிரியை எழிலரசி உட்பட 1600 மாணவிகள், 60 ஆசிரியர்கள் பங்கேற்றதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

9 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்