பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தொடங்கியது

By செய்திப்பிரிவு

பொறியியல் துணை கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டு, இணைய வழிகலந்தாய்வும் தொடங்கியது.

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிவடைந்துள்ளது. இதன்மூலம் பிஇ, பிடெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் 89,187இடங்கள் நிரம்பியுள்ளன. இன்னும்62,683 இடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில், அடுத்த கட்டமாக நடத்தப்படும் பொறியியல் துணை கலந்தாய்வுக்கு 9,463 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். அவர்களில் 9,113 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, அவர்களது தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இணைய வழியிலான கலந்தாய்வும் உடனடியாக தொடங்கியது. இதில் பங்கேற்கும் அரசு பள்ளி மாணவர்கள் (6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுபள்ளியில் படித்தவர்கள்) அவர்களுக்குரிய 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிலும், பொது ஒதுக்கீட்டிலும் கல்லூரியை தேர்வு செய்யலாம் என்றுதமிழ்நாடு பொறியியல் மாணவர்சேர்க்கை செயலர் டி.புருஷோத்தமன் அறிவித்துள்ளார்.

தங்களுக்கு விருப்பமான கல்லூரி, பாடப் பிரிவை தேர்வு செய்ய இன்று மாலை 5 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நாளை (அக்.23) தற்காலிகஒதுக்கீடு வழங்கப்பட்டு, இரவு 7 மணிக்குள் அவர்கள் அதை உறுதிப்படுத்த வேண்டும். கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை 24-ம் தேதி வழங் கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்