சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2021-22-ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் உயர்கல்வி படிப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

பள்ளிப் படிப்பு வரையிலான கல்வி உதவித்தொகை பெற நவ.15-ம் தேதி வரையிலும், உயர்கல்விக்கான உதவித் தொகைக்கு நவ.30-ம் தேதி வரையிலும் www.scholarships.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு திருவள்ளூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றம் சிறுபான்மையினர் நலஅலுவலரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

இலக்கியம்

5 hours ago

தமிழகம்

40 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்