தனியார் பள்ளிகள் அனுமதி கோரினாலும் பெற்றோர் மத்தியில் இன்னும் அச்சம் விலகவில்லை: பள்ளி திறப்பு குறித்து அமைச்சர் கருத்து

By செய்திப்பிரிவு

அனைத்து வகுப்புகளையும்திறக்க அனுமதிக்க வேண்டும்என தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்தபோதிலும், பெற்றோர் மத்தியில் இன்னும் அச்சம் விலகவில்லை என்று பள்ளிக் கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

கோவையில் தனியார் பள்ளிநிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

கரோனா காலத்தில் தனியார் பள்ளிகள் நடத்துவதில் சிரமம்இருப்பதாக தெரிவித்துள்ளனர். தனியார் பள்ளி ஆசிரியர்கள்வேலையின்றி உள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்துமுதல்வர் கவனத்துக்கு கொண்டுசென்று உள்ளோம். முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வில் வயது வரம்பு உயர்த்த பரிசீலனை செய்து வருகிறோம்.

கட்டாயப்படுத்தக் கூடாது

1-ம் வகுப்பு முதல் அனைத்து வகுப்புகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், பெற்றோர் மத்தியில் இன்னும் அச்சம் விலகவில்லை. பள்ளிகளுக்கு மாணவர்கள் வர வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது என அறிவுறுத்தி உள்ளோம்.

பள்ளியில் கரோனா பாதிப்பு இருந்தால் பள்ளிக் கல்வித்துறையின் கவனத்துக்கு கொண்டு வரவேண்டும். மறைக்கத் தேவையில்லை. நீட் தேர்வு தொடர்பாக சட்டப் போராட்டம் நடத்தப்படும். பள்ளிகளில் உளவியல் ஆசிரியர்கள் தேவை உள்ளது. அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்