சிறப்பு பிரிவு கலந்தாய்வு செப்.17-ல் தொடக்கம்; பொறியியல் தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு: கடந்த ஆண்டைவிட 11,284 இடங்கள் குறைந்தன

By செய்திப்பிரிவு

சிறப்பு பிரிவு கலந்தாய்வு செப்.17-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. பொறியியல் கல் லூரிகளில் கடந்த ஆண்டைவிட 11,284 இடங்கள் குறைந்துள்ளன.

தமிழகத்தில் உள்ள பொறியியல்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து முதல்கட்டமாக, அரசுப் பள்ளிமாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு செப்.17 முதல் 24-ம் தேதி வரையும், பொதுப் பிரிவு கலந்தாய்வு செப்.27 முதல் அக்.17-ம் தேதி வரையும் நடக்க உள்ளன.

440 கல்லூரிகள் பங்கேற்பு

தமிழகத்தில் இந்தக் கல்வி ஆண்டில் 440 கல்லூரிகள் மட்டுமே பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கின்றன. அதன்படி, 1 லட்சத்து51 ஆயிரத்து 870 இடங்கள் மட்டுமேகலந்தாய்வுக்கு கிடைத்துள்ளன. கடந்த ஆண்டில் 461 கல்லூரிகளில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்கள் கலந்தாய்வுக்குக் கிடைத்தன.

இதனால் கடந்த ஆண்டைவிட தற்போது 11,284 இடங்கள்குறைந்துள்ளன. விண்ணப்பித்தவர்களைவிட இடங்கள் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

27 mins ago

தமிழகம்

40 mins ago

இந்தியா

58 mins ago

ஜோதிடம்

33 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

4 hours ago

மேலும்