அரசு கல்லூரியாக மாறிய உறுப்புக்கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்கள் சேர தயக்கம் ஏன்?

By என்.சன்னாசி

அரசு கல்லூரியாக மாற்றப்பட்ட சில உறுப்புக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநரக நிர்வாகத்தில் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட் டங்களில் 26 அரசு கலை அறி வியல் கல்லூரிகள் உள்ளன.

ஏற்கெனவே மதுரை காமராசர் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிய அருப்புக்கோட் டை, திருமங்கலம், சாத்தூர், தேனி கோட்டூர் ஆகிய உறுப்புக் கல்லூரிகளும், தற்போது அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளன.

இக்கல்லூரிகளில் கடந்த வாரம் மாணவர் சேர்க்கை தொடங்கியது. இக்கல்லூரிகளில் இளநிலை தமிழ், ஆங்கிலம், கணி தம், பி.காம் உள்ளிட்ட பாடப் பிரிவுகளே உள்ளன.

இந்த ஆண்டு ‘ஆல் பாஸ்' திட்டத்தால் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என கல்லூரி முதல் வர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அருப்புக்கோட்டையை ஒட்டிய அரசு கல்லூரியில் பி.காம் தவிர பிற பாடப்பிரிவுகளில் 20 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் களே சேர்ந்துள்ளனர்.

போதிய கட்டமைப்பு வசதி யின்மை, கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக சில கருத்துகளை முன்னாள் மாணவர்கள் பரப்பியதால் மாணவர் சேர்க்கை குறைந்திருக்குமோ என ஆசிரியர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.

இதுகுறித்து அக்கல்லூரி ஆசி ரியர்கள் சிலர் கூறியதாவது:

கடந்த ஆண்டை விட கல்விக் கட்டணம் கூடுதல் என்றாலும், அத்தொகையைக் கூட செலுத்த முடியாத சூழலில் மாணவர்கள் உள்ளதாகத் தெரிகிறது. கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம், கல்லூரி கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது உள்ளிட்ட நட வடிக்கைகளை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் மேற்கொண்டால் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்றனர்.

இதுகுறித்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முத்து ராமலிங்கம் கூறியதாவது:

மதுரை மண்டலத்தில் புதிதாக இணைந்த 4 கல்லூரிகளிலும் அரசு விதிமுறை படி மாணவர் சேர்க்கை நடக்கிறது. திருமங்கலம் போன்ற நகரையொட்டிய கல்லூரிகளில் முதல் பட்டியலிலேயே பெரும் பாலும் சேர்ந்துள்ளனர்.

எந்தக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை குறைவாக இருந்தாலும் ஆய்வு செய்து சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக் கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

கல்வி

9 hours ago

மேலும்