ஹரியாணா மாநில பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டு முதல் யோகா பாடம்

By செய்திப்பிரிவு

ஹரியாணாவில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் யோகா சேர்க்கப்படும் என்று முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சண்டிகரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஹரியாணா முதல்வர் பேசியதாவது:

யோகா மனதையும் உடலை யும் செம்மைப்படுத்தும் சிறந்த கலை யாகும். மாணவர்கள் தினமும் யோகாசனப் பயிற்சி செய்ய வேண் டும். யோகா பயிற்சி செய்யும் பழக்கத்தை மாணவர்களுக்கு குழந்தைப் பருவத்திலேயே மன தில் விதைக்க வேண்டும்.

மாணவர்களின் அன்றாட வாழ் வின் ஒரு பகுதியாக்கும் வகை யில் ஹரியாணாவில் உள்ள பள்ளிகளி்ன் பாடத்திட்டத்தில் யோகா சேர்க்கப்படும். 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டி லேயே பாடத் திட்டத்தில் யோகாவை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குடிநீர், உணவு, ஆக்சிஜன் போல உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள யோகா முக் கியம். யோகா பயிற்சி செய்ய மக் களை ஊக்கப்படுத்தி அந்தப் பயிற் சியை மக்களிடம் கொண்டு செல் வதே அரசின் நோக்கம். இதற்காக 1,000 கிராமங்களில் யோகா பயிற்சி நிலையங்கள் அமைக்க திட்ட மிட்டுள்ளோம். இதுவரை 550 கிராமங்களில் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள கிராமங்களிலும் பணிகள் நடந்து வருகின்றன. 1,000 யோகா பயிற்சி யாளர்களும் நியமிக்கப்படு வார்கள். இவ்வாறு மனோகர் லால் கட்டார் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்