சமக்ர சிக் ஷா திட்டத்தில் மாநிலங்களுக்கு ரூ.7,622 கோடி

By செய்திப்பிரிவு

மத்திய அரசு சார்பில் கடந்த 2018 மே மாதம் சமக்ர சிக் ஷா அபியான் (முழுமையான கல்வி திட்டம்) தொடங்கப்பட்டது. சர்வ சிக் ஷா அபியான், ராஷ்டிரிய மத்யமிக் சிக் ஷா, ஆசிரியர் கல்வி திட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் புதிய திட்டம் செயல் படுத்தப்பட்டது.

தரமான கல்வி, டிஜிட்டல் கல்வி, பள்ளி கட்டமைப்பை வலுப்படுத்துதல், பெண் கல்வி, திறன்மேம்பாடு, விளையாட்டு, கல்வியில் சமநிலை ஆகியவற்றுக்கு சமக்ர சிக் ஷா திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் ட்விட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

2021-22-ம் கல்வியாண்டில் சமக்ர சிக் ஷா திட்டத்தில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங் களுக்கு இதுவரை ரூ.7,622 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இலவச பாடப்புத்தகங்கள், சீருடைகள், தொழில் கல்வி, டிஜிட்டல் கல்வி, தகவல் தொழில்நுட்பம், கேஜிபிவி பள்ளிகளை நடத்துவதற்காக இந்த நிதி வழங்கப்பட்டிருக்கிறது.

பள்ளி செல்லாத 6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமக்ர சிக் ஷா திட் டத்தில் பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும். அவர்களது கற்றல் இடைவெளியை சரி செய்ய சிறப்பு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

12 hours ago

மேலும்