அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் தனியார் பள்ளிகளை மூட வேண்டும்: தொடக்கக்கல்வித் துறை உத்தரவு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் தனியார் பள்ளிகளை உடனே மூட வேண்டும் என்று தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் மு.பழனிசாமி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அரசின் அங்கீகாரம் இல்லாமல் எந்தப் பள்ளியும்செயல்படக் கூடாது என்பது விதிமுறையாகும். தொடக்கக் கல்விஇயக்குநரகத்தின்கீழ் செயல்படும் அரசு உதவி பெற்றும் மற்றும் தனியார் பள்ளிகளில் உரியஅங்கீகாரம் பெறாமல் இயங்கும்பள்ளிகளின் விவரங்களை உடனே சேகரிக்க வேண்டும்.

நடப்பு கல்வியாண்டில் அங்கீகாரம் பெறுவதற்கான கட்டமைப்பு வசதிகள் மற்றும் முழுமையான கருத்துரு அளிக்க இயலாதபள்ளிகளை உடனே மூடவேண்டும். அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களை அருகே உள்ள வேறு பள்ளிகளில் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதவிர தொடக்க மற்றும்தொடர் அங்கீகாரமின்றி இயங்கும் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளிக்கவும், துரிதமாக அனுமதி பெறவும் உத்தரவிட வேண்டும்.

ஏதேனும் பள்ளிகள் உரிய அங்கீகாரமின்றி செயல்படும் பட்சத்தில் அதற்கு அந்தந்த முதன்மை,மாவட்ட மற்றும் வட்டார அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்.எனவே, கவனமுடன் செயல்பட்டுஅங்கீகாரமின்றி இயங்கும் பள்ளிகள் மற்றும் அவைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரத்தை இயக்குநரகத்துக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

மாநிலம் முழுவதும் 500-க்கும்மேற்பட்ட தனியார் பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

39 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்