புதிய தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றி தாய்மொழியில் பொறியியல் பாடங்களைக் கற்பிக்கலாம்: அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் அனுமதி

By செய்திப்பிரிவு

வரும் கல்வியாண்டு முதல் தமிழ் உள்ளிட்ட 8 பிராந்திய மொழிகளில் பொறியியல் பாடங்களைக் கற்பிக்க அகில இந் திய தொழில்நுட்பக் கழகம் (ஏஐசிடிஇ) அனுமதி வழங்கி உள்ளது.

கலை, அறிவியல், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளைத் தாய் மொழியில் கற்பிக்க வேண்டும் என்று புதிய தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. அதன் படி, தாய்மொழியில் கல்வி பயிலு வதை ஊக்குவிக்க ஆங்கிலத்தில் உள்ள பாடங்களை முதல்கட்ட மாகத் தமிழ், பெங்காலி, குஜ ராத்தி, இந்தி, மராத்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 8 பிராந் திய மொழிகளில் மொழிபெயர்க் கப்பட்டு வருவதாகவும், அதற்காக செயற்கை நுண்ணறிவு தளம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஏஐசிடிஇ-யின் தலைவர் அனில் சகஸ்ரபுத்தே, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்குக் கடந்த மார்ச் மாதம் பேட்டி அளித்திருந்தார்.

இந்நிலையில், இளநிலை பொறியியல் பாடங்களுக்கான மொழிபெயர்ப்பு பணிகள் நிறை வடைந்துள்ளன. அதன்படி, தமிழ் உள்ளிட்ட 8 பிராந்திய மொழிகளில் பொறியியல் கல்வி யைப் பயிற்றுவிக்க ஏஐசிடிஇ அனுமதி வழங்கி உள்ளது.

இதுகுறித்து ஏஐசிடிஇ-யின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “இளநிலை பொறியியல் பாடங்கள் 8 பிராந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, 2020-2022-ம் கல்வி ஆண்டிலிருந்து பிராந்திய மொழிகளில் பாடம் நடத்தலாம். இதற்காக அனுமதி யைப் பெற ஏஐசிடிஇ-யிடம் கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதலாக 11 பிராந்திய மொழிகளில் பொறியியல் பாடங் களை மொழிபெயர்க்கத் திட்ட மிடப்பட்டுள்ளது, அதேநேரம், பிராந்திய மொழிகளில் பாடம் படிக்கவும், கற்பிக்கவும் கட்டாயம் எதுவுமில்லை” எனத் தெரிவித்தார்.

ஏற்கெனவே, அண்ணா பல் கலைக்கழகத்தில் பி.இ. மெக் கானிக்கல், பி.இ. சிவில் ஆகிய 2 பொறியியல் படிப்புகள் தமிழ் மொழியில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் கற்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

தமிழகம்

22 mins ago

இந்தியா

7 mins ago

சினிமா

31 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்