கல்வித் தரத்தை மேம்படுத்த புதிய வழிகாட்டு குழுவை அமைக்க யுஜிசி உத்தரவு

By செய்திப்பிரிவு

உயர்கல்வி நிறுவனங்களில் கல்வியின் தரத்தை மேம்படுத்த அமைக்கப்பட்ட புதிய வழிகாட்டு குழு தொடர்பான விவரங்களை மார்ச் 31-ம் தேதிக்குள் பதிவேற்ற பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக யுஜிசி சேர்மன் டி.பி.சிங் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட கல்விப் பணிகளை பல சவால்களுக்கிடையே இணையவழி வகுப்புகள் மற்றும் தேர்வுகள் மூலமாக மீட்டெடுத்த கல்வி நிறுவனங்களின் செயல் பாடுகள் பாராட்டுக்குரியது. அதற்காக எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அதே நேரத்தில், கல்வியின் தரத்தை மேம்படுத்துவது ஒவ்வொரு கல்வி நிறுவனத்தின் பொறுப்பாகும்.

அதற்காக, தேசிய கல்விக் கொள்கை (என்இபி) பல்வேறு திட்டங்களை கொண்டுள்ளது. அதன்படி, கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு நிறுவனத்திலும் 5 அல்லது 10 பேர் கொண்ட கல்வி வழிகாட்டு குழுவை கட்டாயம் அமைக்க ஏற்கெனவே வலியுறுத்தப்பட்டது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் யுஜிசியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

அதன்படி, தங்களின் நிறுவ னத்தில் அமைக்கப்பட்ட கல்வி வழிகாட்டு குழு தொடர்பான விவரங்களை அனைத்து கல்வி நிறுவனங்களும் மார்ச் 31-ம் தேதிக்குள் யுஜிசியின் போர்ட்டலில் பதிவேற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

இந்தியா

41 mins ago

க்ரைம்

45 mins ago

இந்தியா

54 mins ago

விளையாட்டு

55 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்