தேர்தல் பணியில் ஈடுபடும் பெண் ஆசிரியர்களுக்கு அந்தந்தத் தொகுதியிலேயே பணி ஒதுக்கீடு செய்க: தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை

By கே.சுரேஷ்

தேர்தல் பணியில் ஈடுபடும் பெண் ஆசிரியர்களுக்கு அந்தந்தத் தொகுதியிலேயே பணி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டுப் புதுக்கோட்டையில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் பெ.அழகப்பன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தபால் வாக்குகளை முறையாக வழங்க வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் பெண் ஆசிரியர்களுக்கு அந்தந்தத் தொகுதியிலேயே பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும். 100 சதவீதம் அனைவரும் வாக்களிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு மாவட்ட நிர்வாகம் பேருந்து வசதியையும், பாதுகாப்பு வசதியையும் ஏற்படுத்தித் தரவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாநிலப் பொதுச் செயலாளர் நா.சண்முகநாதன், மாவட்டச் செயலாளர் க.சு.செல்வராஜ், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ந.ரவிச்சந்திரன், மாவட்டப் பொருளாளர் சு.அங்கப்பன், மாவட்ட துணைத் தலைவர் ம.சிவா, மாவட்டத் துணைச் செயலர் து.அந்தோணி முத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்