தமிழகத்தில் இணையவழி கல்வியை கற்பிக்க 11 உயர்கல்வி நிறுவனங்கள்: பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி

By செய்திப்பிரிவு

இணையவழி கல்வியை வழங்க,தமிழகத்தில் 11 கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அனுமதி வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் இயங்கும் உயர்கல்வி நிறுவனங்களில் இணையவழியில் கல்வி பயிற்றுவிக்க வழிகாட்டு நெறிமுறைகளின்படி ‘நாக்’ அங்கீகாரம் அல்லது தேசிய தரவரிசை பட்டியலில் (என்ஐஆர்எப்) முன்னணியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே யுஜிசி அனுமதி வழங்குகிறது. இந்நிலையில், 2021-ம் ஆண்டில் இணையவழி கல்வி திட்டத்தின்கீழ் மாணவர் சேர்க்கை நடத்த 37 கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசிஅனுமதி வழங்கி உள்ளது. அதில்,தமிழகத்தைச் சேர்ந்த 11 உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு முதுநிலை படிப்புக்கும், பாரதிதாசன் பல்கலையில் 11 படிப்புகளுக்கும், மதுரை காமராஜர் பல்கலையில் 11 படிப்புகளுக்கும், பெரியார் பல்கலையில் 7 படிப்புகளுக்கும், அழகப்பா பல்கலையில் 12 படிப்புகளுக்கும் அனுமதி கிடைத்துள்ளது. இதுதவிர 6 தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

வாழ்வியல்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஓடிடி களம்

13 hours ago

மேலும்