சங்கர் ஐஏஎஸ் அகாடமி - மத்திய சமூக நீதி அமைச்சகம் இணைந்து நடத்திய இந்து தமிழ் திசை ‘சிறப்பு ஆளப்பிறந்தோம்: திட்டமிட்டு விடாமுயற்சியுடன் படித்தால் வெற்றி பெறுவது நிச்சயம்: இலவச பயிற்சிக்கான ஆன்லைன் நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற எஸ்.கிருஷ்ணபிரியா யோசனை

By செய்திப்பிரிவு

‘திட்டமிட்டு விடாமுயற்சியுடன் படித்தால் வெற்றி பெறுவது நிச்சயம்’என்று கடந்த ஆண்டு யுபிஎஸ்சிதேர்வில் வெற்றி பெற்ற எஸ்.கிருஷ்ணபிரியா ஆலோசனை வழங்கினார்.

சங்கர் ஐஏஎஸ் அகாடமி, மத்திய சமூகநீதி அமைச்சகம் இணைந்து நடத்தியஇந்து தமிழ் திசை ‘சிறப்பு ஆளப்பிறந்தோம்’ யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சியைப் பெறுவதற்கான ஆன்லைன் வழிகாட்டு நிகழ்ச்சி கடந்த ஞாயிறு காலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக, சங்கர் ஐஏஎஸ் அகாடமி, மத்திய சமூக நீதி அமைச்சகம் இணைந்து நடத்திய இலவச பயிற்சியில் பங்கேற்று, கடந்தஆண்டில் தேர்வான எஸ்.கிருஷ்ணபிரியா (Indian Defence Accounts Service, Proba-tioner) கலந்து கொண்டு பேசியதாவது:

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வெழுதும் மாணவர்களுக்காக மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் சார்பில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி நடத்தும் இலவச பயிற்சி, கிராமப்புற மாணவர்களுக்கு மிகுந்த பயனளிக்கக் கூடியது. இந்தப் பயிற்சியின் மூலமாகத்தான் என்னால் இந்தத் தேர்வில் வெற்றி பெற முடிந்தது. மற்ற தேர்வுகளைப் போலவே இதற்கும் திட்டமிட்டு, விடாமுயற்சியுடன், சற்று கூடுதலாக உழைத்தால் வெற்றி நிச்சயம்.

முதல்கட்டமாக காலை, மாலை எனஇரு தேர்வுகள் நடைபெறும். பொதுத்தாளில் இந்திய வரலாறு, பொருளாதாரம்,அரசியலமைப்பு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இடம்பெறும் வினாக்களுக்கு பதில்அளிக்க வேண்டும். அன்றாட நிகழ்வுகளிலிருந்து கேட்கப்படும் வினாக்களுக்குப் பதில் எழுத தினமும் நாளிதழ்களைத் தவறாமல் படிக்க வேண்டும். நாளிதழ்களின் முதல் பக்கச் செய்திகளையும், நடுப்பக்க கட்டுரைகளையும் அவசியம் படிக்க வேண்டும். ‘இந்து’ பத்திரிகையை நான் தவறாமல் படிப்பேன். அதில் வரும் செய்திகள் யுபிஎஸ்சி தேர்வெழுதுபவருக்கு மிகுந்த உதவியாக இருக்கும்.

அன்றாட செய்திகளைப் பற்றியும், அவற்றை எவ்விதம் ஆராய்ந்து படிக்க வேண்டும் என்பதையும் அறிந்துகொள்ள சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் இணையப் பக்கத்திலுள்ள ‘ஐஏஎஸ் பார்லிமெண்ட்’ எனும் லிங்க்கைப் பாருங்கள். யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராக நாள்தோறும் 8முதல் 10 மணி நேரம் கவனச் சிதறல்ஏற்படாமல் நம் சிந்தனையை ஒருமுகப்படுத்தி படிக்க வேண்டும். தமிழிலும் தேர்வை எழுதலாம். நம்மை நாமேகுறைத்து மதிப்பிடாமல், நம்பிக்கையோடு தேர்வைச் சந்தித்தால் வெற்றி பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.

சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் பயிற்றுநர் அருண்குமார் பேசியதாவது:

மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் சார்பில் கடந்த 2017-18 ஆண்டுமுதல் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான இலவச பயிற்சியை சங்கர் ஐஏஎஸ்அகாடமி வழங்குகிறது. இந்தப் பயிற்சிக்குத் தேர்வாகும் மாணவர்களின் குடும்ப வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். 10, 12 மற்றும் பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஓபிசி ஆண்கள் 80% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி ஆண்கள், பெண்கள் மற்றும் ஓபிசி பெண்கள் 75%-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

இந்த ஆண்டு 50 யுபிஎஸ்சி மாணவர்களுக்கும், 35 டிஎன்பிஎஸ்சி மாணவர்களுக்கும் முற்றிலும் இலவச பயிற்சிவழங்கப்படவுள்ளது. மாணவர்கள், தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தை https://www.shankarias academy.com/free-ias-coaching/ என்ற இணையப் பக்கத்தில் மார்ச் 10-க்குள் (நாளை) பதிவு செய்யவேண்டும். எழுத்துத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் நேர்காணல் மற்றும் ஆவணங்கள் சரிபார்த்தலுக்கு அழைக்கப்படுவார்கள்.

இந்தத் தேர்வில் தவறான பதிலுக்குமைனஸ் மார்க் கிடையாது. இதற்கானநுழைவுத் தேர்வு வரும் மார்ச் 19-ம் தேதி ஆன்லைன் முறையில் நடைபெறும். செய்தித்தாள்களைத் தொடர்ந்து வாசித்துவரும் பழக்கமுள்ளவர்கள் இந்தத் தேர்வில் வெற்றி பெறுவது எளிது. கூடுதல் விவரங்களுக்கு 7667766266, 9444166435 ஆகிய செல்பேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். மேலும், https://www.shankariasacademy.com/free-ias-coaching/ என்ற இணையப் பக்கத்திலும் அறிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சிறப்பு விருந்தினர் மற்றும் பயிற்றுநர் பதில் அளித்தனர். இந்த ஆன்லைன் நிகழ்ச்சியை ‘இந்துதமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் நெறிப்படுத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

55 mins ago

க்ரைம்

53 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்