புதிய கல்விக் கொள்கை வழியாக எந்த மொழியும் திணிக்கப்படாது: மத்திய கல்வி அமைச்சகம் உறுதி

By செய்திப்பிரிவு

புதிய கல்விக் கொள்கை வழியாகஎந்தவொரு மொழியும் திணிக்கப்படாது என்று மத்திய கல்வி அமைச்சகம் மீண்டும் உறுதியளித்துள்ளது.

1952-ம் ஆண்டு, அப்போதைய கிழக்கு பாகிஸ்தானின் தலைநகர் டாக்காவில் வங்கதேச மொழியை ஆட்சி மொழியாக்க கோரி நடந்த போராட்டத்தில் சில மாணவர்கள்உயிரிழந்தனர். அவர்கள் நினைவாக பிப்ரவரி 21-ம் தேதி சர்வதேச தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுவதாக யுனெஸ்கோ சார்பில் 1999 பிப்ரவரி மாதம் நடந்த மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 2000-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ம் தேதி சர்வதேசதாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான சர்வதேச தாய்மொழி தினத்தை பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சகம் வலியுறுத்தியது.

இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சகம் சார்பாக ‘கல்வி மற்றும் சமூகத்தில் பன்மொழியை வளர்ப்பது’ என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கு நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக மத்தியகல்வி அமைச்சகம் தனது ட்விட்டர்பதிவில், “தாய்மொழிகளின் வளர்ச்சிக்கு தேசிய கல்விக் கொள்கை இடம் அளிக்கிறது. அதன்படி, அனைத்து பள்ளிகளிலும் தாய்மொழி, வட்டார மொழியே பயிற்று மொழியாக இருக்கும். எந்தவொரு மாணவர் மீதும் பிற மொழிகள் திணிக்கப்படாது” என்று பதிவிட்டுள்ளது.

முன்னதாக, தேசிய கல்விக் கொள்கையில் மொழிகள் குறித்துஎழுப்பப்பட்ட கேள்விகளுக்குஇதே பதிலைத்தான் மத்திய கல்விஅமைச்சர் ரமேஷ் பொக்ரியால்தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்