மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நீட் தேர்வை ஆண்டுக்கு இரு முறை நடத்த முடிவு: மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்

By செய்திப்பிரிவு

மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைக்கும் விதமாக ஆண்டுக்கு இரு முறை நீட் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்வு ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் நடத்தப்படுகிறது.

இதற்கிடையே, கரோனா பரவலால் கடந்த ஆண்டு நீட் தேர்வு பலமுறை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் செப். 13-ம் தேதி நடத்தப் பட்டது. எனினும், நடப்பாண்டு நீட் தேர்வுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. நோய்ப் பரவல் மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு நீட் தேர்வுக்கான தேதி இறுதி செய்யப்படாமல் இருப்பதாக கூறப் படுகிறது.

அதேநேரத்தில், ஜேஇஇ முதல் நிலை தேர்வு போல, நீட் தேர்வை யும் ஆண்டுக்கு பலமுறை நடத்த வேண்டும் என்று தொடர் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சகங்கள் இணைந்து பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்திவந்தன.

இந்நிலையில், நீட் தேர்வை ஆண்டுக்கு இரு முறை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் சிலர் கூறிய தாவது:

தற்போது நீட் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைக்கும் விதமாக நீட் தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத் தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

பெரும்பாலான மாணவர்கள் இணையவழித் தேர்வுக்கு இன்னும் தயாராகவில்லை. எனவே, எழுத் துத் தேர்வாகவே நீட் நடைபெறும். இவ்விரு தேர்வுகளில் மாணவர் பெறும் அதிகபட்ச மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும்.மேலும், நடப்பாண்டுக்கான நீட் தேர்வு தேதிகள் விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தற்போது காகித முறையில் தேர்வு நடத்தப்படுகிறது. இதனை இரு முறை நடத்த வேண்டி வந்தால் ஏராளமான ஏற்பாடுகளைக் கூடு தலாகச் செய்ய வேண்டி இருக்கும். இதனால் ஆன்லைனில் ஆண்டுக்கு இரு முறை தேர்வு வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்