சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த வாரம் கலந்தாய்வை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின்கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞர்அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்த 5 அரசு கல்லூரிகளில் உள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படுகிறது. எஞ்சிய 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது. இதேபோல் 24 தனியார் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. எஞ்சிய இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன.
இந்நிலையில், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப்படிப்புகளுக்கு 2020-21 கல்விஆண்டு மாணவர் சேர்க்கைக்கானவிண்ணப்ப விநியோகம் கடந்தடிசம்பர் 13-ம் தேதி காலை 10 மணிக்கு இணையதளத்தில் தொடங்கி 30-ம் தேதி மாலை5 மணியுடன் நிறைவடைந்தது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது 31-ம் தேதி மாலை 5.30 மணியுடன் முடிவடைந்தது.
அடுத்த வாரம் கலந்தாய்வு
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 3,492 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 1,346 பேரும் விண்ணப்பித்தனர். விண்ணப்பங்கள் பரிசீலனைக்குப்பின் தரவரிசைப் பட்டியல் www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த வாரம் கலந்தாய்வைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தரவரிசை பட்டியல் விவரம்
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 3,310 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த தரவரிசைப் பட்டியலில் ஏ.சவுனிகா (நீட் மதிப்பெண் 558) என்ற மாணவி முதலிடத்தையும், எஸ்.நிதி (543) இரண்டாவது இடத்தையும், ஏ.சவுந்தர்யா (541)மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர். நிர்வாக ஒதுக்கீட்டுக்கான தரவரிசைப் பட்டியலில் 1,301 பேர் இடம்பெற்றுள்ளனர். வி.காவ்யா (நீட் மதிப்பெண் 494) முதலிடத்தையும், டி.நித்யா (494) இரண்டாவது இடத்தையும், ஆர்.ஜெய (487) மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
7.5 சதவீத ஒதுக்கீடு
அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு தரவரிசைப் பட்டியலில் 119 பேர் இடம்பெற்றுள்ளனர். வி.மோகன் (நீட் மதிப்பெண் 333) முதலிடத்தையும், பி.தவமணி (227) இரண்டாவது இடத்தையும், எஸ்.துல்பியா (192) மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
28 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
வலைஞர் பக்கம்
34 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago