உயர்கல்வி நிறுவனங்களில் சர்வதேச கல்வி விவகாரங்களுக்கு மையம் அமைக்க யுஜிசி உத்தரவு: பிப்.15-க்குள் அறிக்கை தர அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

உயர்கல்வி நிறுவனங்களில் சர்வதேச கல்வி விவகாரங்களுக் கான சிறப்பு மையம் அமைக் கப்பட வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் ரஜினிஷ் ஜெயின், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்களின்படி, இந்திய மாணவர்கள் உலகளவில் வேலைவாய்ப்புகளை பெறு வதற்கான சாத்தியங்கள் உயர்கல்வி நிறுவனங்களில் உருவாக்கப்பட வேண்டும்.

இதை கருத்தில்கொண்டு நாடு முழுவதுமுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் சர்வதேச கல்வி விவகாரங்களுக்கான சிறப்பு மையங்கள் அமைக்க வேண்டும். இந்த மையம் மூலம் வெளிநாட்டு மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். இதற்காக ஏற்கெனவே பல்கலைக்கழகங்களில் படித்து தற்போது வெளிநாடுகளில் வசிப்பவர்களின் உதவிகளையும் நாடலாம்.

இதுதவிர கல்வி நிறுவனங் களில் மேற்கொள்ளப்படும் புதிய ஆராய்ச்சிகள், புதிய படிப்புகள் போன்ற தகவல்களை உலகளவில் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த பணிகளை பிப்ரவரி 15-ம் தேதிக்குள் முடித்து அதுகுறித்த அறிக்கையை யுஜிசிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

தமிழகம்

53 mins ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்