எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக் சேர்க்கைக்கான ‘டான்செட்’ தேர்வுக்கு நாளைமுதல் விண்ணப்பம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்.பிளான் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ‘டான்செட்’ எனப்படும் நுழைவுத்தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது.

இத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான நுழைவுத்தேர்வு மார்ச் 20, 21-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு ஜன.19 முதல் பிப்.12-ம் தேதி வரை நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

அதன்படி ‘டான்செட்’ தேர்வுக்கான ஆன்லைன் பதிவு நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்.பிளான் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.annauniv.edu) விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தின் நிலை குறித்து பிப்.17-ம் தேதி அறிந்துகொள்ளலாம். தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை மார்ச் 5-ம் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

24 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

47 mins ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்