அரசு உதவி பெறும் பள்ளிகளில் பொது தகவல் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

அரசு உதவி பெறும் பள்ளிகள் பொதுதகவல் வழங்கும் அதிகாரி களை நியமிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத் தியுள்ளது.

இந்திய தகவலறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசு, அரசு சார்ந்த அலுவலகங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் தகவல் அலுவலர்கள் நியமிக்கப் பட வேண்டும். அதன்படி பள்ளிக் கல்வித் துறையில் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் தகவல் அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளும் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்கி வருவதால், அவற்றிலும் பொதுதகவல் அலுவலர் வழியே தகவல்கள் பெற உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என தொடர் கோரிக்கைகள் எழுந்தன.

அதையேற்று அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி செயலர் மற்றும் முதல்வர் தான் தகவல்களை வழங்க வேண்டும். இதற்கான அறிவிப்பாணை ஏற்கனவே தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. அதை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும். தேவை ஏற்பட்டால் பொது தகவல் வழங்கும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று அரசு உதவி பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்