சைனிக் பள்ளிகளில் சேர நுழைவுத்தேர்வு: ஹால் டிக்கெட்டை என்டிஏ வெளியிட்டது

By செய்திப்பிரிவு

சைனிக் பள்ளிகளில் சேர நுழைவுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை, தேர்வை நடத்தும் என்டிஏ வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 33 சைனிக் பள்ளிகளில் 2021- 22ஆம் கல்வியாண்டில் 6 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய நுழைவுத் தேர்வு ஜன.10-ம் தேதி நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. அதற்கான விண்ணப்பப் பதிவு நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையே நிர்வாகக் காரணங்களால் நுழைவுத்தேர்வு பிப். 7-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தேர்வு எழுத உள்ள 6 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை, தேர்வை நடத்தும் என்டிஏ வெளியிட்டுள்ளது. இதில் தேர்வரின் பெயர், அடையாள எண், தேர்வு மையம், தேதி மற்றும் இடம் போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஹால் டிக்கெட்டைத் தரவிறக்கம் செய்ய: aissee.nta.nic.in

இதுகுறித்த கூடுதல் விவரங்களை என்டிஏ இணையதளத்தில் (www.nta.ac.in) அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 0120 6895200 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டோ அல்லது aissee@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியாகத் தொடர்புகொண்டோ விளக்கம் பெறலாம்.

வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து சைனிக் பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பில் சேருவதற்கு மாணவிகளும் விண்ணப்பம் செய்யலாம். அதேபோல வரும் கல்வி ஆண்டு (2021-22) முதல் கிரீமிலேயர் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

26 mins ago

இந்தியா

50 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்