பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்: வளாகங்களில் முடுக்கிவிடப்பட்ட தூய்மைப் பணி

By செய்திப்பிரிவு

பள்ளிகள் திறப்புக்கு ஏதுவாகதூய்மைப் பணிகள், வகுப்பறைகள் பிரித்தல் உள்ளிட்ட முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை முடுக்கிவிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது கரோனா பரவல் குறைந்துவரும் நிலையில், பொங்கல் விடுமுறைக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்கான பெற்றோர் கருத்துகேட்பு கூட்டம் அனைத்து பள்ளிகளிலும் கடந்த 7, 8-ம் தேதிகளில் நடத்தப்பட்டது. இதில் சுமார்85 சதவீத பெற்றோர் பள்ளிகளை திறக்கலாம் என கருத்து தெரிவித்திருந்தனர். இதையடுத்து பள்ளிகளை ஜனவரி 3-வது வாரத்தில் திறக்க கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கைஅரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் பழனிசாமி ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியிடுவார் என தெரிகிறது.

இந்த சூழலில் பள்ளிகளை திறக்க ஏதுவாக தூய்மைப் பணிகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

பொங்கல் விடுமுறைக்கு பிறகுபள்ளிகள் திறப்புக்கான முன்னேற்பாடுகளை மேல்நிலைப் பள்ளிகள் செய்து முடித்து தயாராக இருக்கஅறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்களைக் கொண்டுவகுப்பறைகள், பள்ளி வளாகங்கள், ஆய்வகங்கள், கழிப்பறைகளை கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணிகளில் தலைமை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். தனிநபர் இடைவெளியோடுஇருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளி வளாகத்தை சுற்றிகரோனா விழிப்புணர்வு வாசகங்கள் எழுதவும், ஆசிரியர்கள் மேற்பார்வையில் இப்பணிகளை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

21 mins ago

சினிமா

34 mins ago

விளையாட்டு

40 mins ago

சினிமா

46 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

52 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்