ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுகள் தேதி: ஜன.7 அன்று ரமேஷ் பொக்ரியால் அறிவிக்கிறார்

By செய்திப்பிரிவு

ஜேஇஇ அட்வான்ஸ்டு 2021 தேர்வுகள் தேதியை ஜனவரி 7ஆம் தேதி அன்று அறிவிக்க உள்ளதாக மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இவை ஜேஇஇ மெயின், ஜேஇஇ அட்வான்ஸ்டு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.

இந்த ஆண்டு ஜேஇஇ மெயின் 2021 தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பிப்ரவரி மாதம் 23 முதல் 26ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜேஇஇ மெயின் 2021 தேர்வு நடைபெறும்.

இந்த நிலையில் 2021 ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுகள் தொடங்கும் தேதிகளை ஜனவரி 7-ம் தேதி மாலை ஆறு மணிக்கு வெபினார் நிகழ்ச்சியில் அறிவிக்க உள்ளதாக மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இந்த வெபினார் நேரலை நிகழ்ச்சி அமைச்சரின் அதிகாரபூர்வ ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் ஒளிபரப்பப்படவுள்ளது. இதனை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எத்தனை முறை ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுகளை எழுதலாம், தேர்வுக்கான தகுதி, கால அட்டவணை ஆகியவற்றை அமைச்சர் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஜேஇஇ தேர்வுகள் நடைபெறும் என்று முன்னதாக அமைச்சர் பொக்ரியால் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஓடிடி களம்

6 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்