சிபிஎஸ்இ பொதுத் தேர்வு நடத்துவது குறித்து ஆசிரியர்களுடன் அமைச்சர் பொக்ரியால் இன்று ஆலோசனை

By செய்திப்பிரிவு

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு நடத்துவது குறித்து நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று மாலை இணைய வழியில் ஆலோசனை நடத்துகிறார்.

கரோனா பரவல் காரணமாக மாணவர்களின் கல்விச் சுமையை குறைக்க பாடத் திட்டத்தில் 30 சதவீதம் வரை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) குறைத்தது. மேலும், 10, 12-ம் வகுப்புபொதுத்தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என்றும் அறிவித்தது.

இதைத் தொடர்ந்து, சிபிஎஸ்இ பொதுத் தேர்வு நடத்துவது குறித்து ட்விட்டர் மூலம் கருத்துகளை தெரிவிக்குமாறு மாணவர்களுக்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ்பொக்ரியால் அழைப்பு விடுத்தார். அதன்படி மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, பொதுத்தேர்வு குறித்து ஆசிரியர்களுடன்அமைச்சர் பொக்ரியால் இன்றுமாலை 4 மணிக்கு நேரலையில்ஆலோசனை நடத்துகிறார். ஆசிரியர்கள் தங்களது சந்தேகங்கள், கருத்துகளை ட்விட்டரில் #EducationMinister GoesLive என்ற ஹேஷ்டேக் மூலம் தெரிவிக்க மத்திய கல்விஅமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்