எடை குறைவாக 15 ஆயிரம் குழந்தைகள்: அங்கன்வாடி பணியாளர்களின் ஆய்வில் தகவல்

By செய்திப்பிரிவு

அங்கன்வாடி பணியாளர்கள் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்ததில், 15 ஆயிரம் குழந்தைகள் எடை குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 54,439 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. ஊரடங்கு காரணமாக அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளதால், வீடுகளுக்கு சென்று குழந்தைகளின் எடையை கண்டறியும் பணிகளில் அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வில் 15 ஆயிரம் குழந்தைகள் எடைகுறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது:

2 மாதங்கள் ஆய்வு

அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் வீடுகளுக்கு சென்று குழந்தைகளின் எடையை கண்டறியும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது. கடந்த செப் டம்பர், அக்டோபர் ஆகிய 2 மாதங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் தமிழகம் முழுவதும் 15,807குழந்தைகள் எடை குறைவாகஇருப்பதாக கண்டறியப்பட்டது. இவர்களில், 4,100 குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட காரணத்தால் மருத்துவமனைகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

மீதமுள்ள குழந்தைகளுக்கு முட்டை, கீரை உள்ளிட்ட ஊட்டச்சத்தான உணவுகளை கொடுக்கும்படி பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்தான உணவுகளை உட்கொள்ளும்போது 3 மாதத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் வயதுக்கு ஏற்ற எடை வந்துவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

32 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

48 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

53 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

மேலும்