அனைத்து அரசுக் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கும் இலவச அதிவேக வைஃபை சேவை- உத்தராகண்டில் அதிரடி

By பிடிஐ

உத்தராகண்டில் அனைத்து அரசுக் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு இலவச அதிவேக வைஃபை சேவையை அம்மாநில முதல்வர் த்ரிவேந்திர சிங் ராவத் தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக நேற்று (நவ.8) நடைபெற்ற விழாவில் உத்தராகண்ட் முதல்வர் த்ரிவேந்திர சிங் ராவத்தின் சொந்தத் தொகுதியான டொய்வாலாவில் உள்ள அரசு முதுகலைக் கல்லூரியில் இலவச அதிவேக வைஃபை சேவை முதன்முதலாகத் தொடங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து விழாவில் பேசிய முதல்வர், ''நாட்டிலேயே முதல்முறையாக உத்தராகண்ட் மாநிலத்தில் இலவச வைஃபை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கு இலவச மற்றும் அதிவேகமான வைஃபை சேவையை அளிக்கும் திட்டத்தைத் தொடங்கி உள்ளோம்.

மாணவர்களின் கல்விக்காகக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் இணையத் தொடர்பு, அவர்களின் வளர்ச்சியில் முக்கியப் பங்கை வகிக்கும். இந்த நடவடிக்கை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பை நோக்கிய பயணம் ஆகும். நவீனத்தையும் பழைமையையும் இணைக்கும் பகுதியின் ஓர் அங்கமாகவும் இது செயல்படும்'' என்று முதல்வர் த்ரிவேந்திர சிங் ராவத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

மேலும்