ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?

By பிடிஐ

சர்வதேச அளவில் ஆசிரியர்களை மதிக்கும் நாடுகளின் பட்டியலில், இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனைச் சேர்ந்த வர்கி அறக்கட்டளை சார்பில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''உலகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களின் நிலை குறித்து, மக்களிடம் இருந்து கருத்துகளைப் பெறும் ஆய்வு அண்மையில் நடத்தப்பட்டது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 35 நாடுகளைச் சேர்ந்த தலா 1,000 பேரிடம் இருந்து ஆசிரியர்கள் குறித்த கருத்துகள் பெறப்பட்டன.

இதில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 6-வது இடத்தைப் பெற்றுள்ளது. இதில் முதலிடத்தில் சீனா உள்ளது. கானா இரண்டாவது இடத்திலும் சிங்கப்பூர் 3-வது இடத்திலும் உள்ளன. கனடா மற்றும் மலேசியாவுக்கு அடுத்தபடியாக ஆறாவது இடத்தை இந்தியா பெற்றுள்ளது''.

இதுகுறித்து வர்கி அறக்கட்டளையின் நிறுவனர் சன்னி வர்கி கூறும்போது, ''ஒவ்வொரு நாட்டிலும் 1,000 பேரிடம் இருந்து ஆசிரியர்கள் குறித்த கருத்துகள் பெறப்பட்டன. உதாரணத்துக்கு ஆசிரியர்கள் நம்பத் தகுந்தவர்களா, இல்லையா, உத்வேகம் அளிப்பவர்களா, இல்லையா, அக்கறையானவர்களா, அக்கறை இல்லாதவர்களா, புத்திசாலிகளா , இல்லையா என்பன உள்ளிட்ட ஏராளமான கேள்விகள் மக்களிடம் கேட்கப்பட்டன. இதில் கிடைத்த பதில்களைக் கொண்டு ஆசிரியர்கள் மீதான மதிப்பு கண்டறியப்பட்டது.

பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகள் மற்றும் பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் நாடுகளில் ஆசிரியர்கள் நன்மதிப்புடன் இருக்கின்றனர்.

உதாரணத்துக்கு கல்விக்கு 14 சதவீதத்தை ஒதுக்கும் இந்தியா, ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகளின் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. பட்டியலில் 24-வது இடத்தைப் பிடித்திருக்கும் இத்தாலி 8.1 சதவீத நிதியை மட்டுமே ஒதுக்குகிறது. அதே நேரத்தில் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் கானா, கல்விக்காக நாட்டு மக்களுக்கு 22.1 சதவீத நிதியை ஒதுக்குகிறது'' என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

19 mins ago

இந்தியா

2 mins ago

க்ரைம்

37 mins ago

சுற்றுச்சூழல்

43 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்