நீட், ஜேஇஇ பாடத்திட்டங்களை 50% குறைக்கவேண்டும்: மணிஷ் சிசோடியா வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டங்களை 50% குறைக்க வேண்டும் என்று டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வலியுறுத்தி உள்ளார்.

என்சிஇஆர்டி-ன் 57வது பொதுக்குழுக் கூட்டம், மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலக் கல்வித் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதில், டெல்லி துணை முதல்வரும் கல்வித்துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா கலந்துகொண்டார்.

அதில் பேசிய அவர், ’’கரோனா சூழலால் நடப்புக் கல்வியாண்டுப் பருவம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி வேலை நாட்கள் தொடர்ந்து வீணாகின்றன. இதனால் பள்ளி பாடத்திட்டத்தைக் குறைக்க வேண்டும். அடுத்த ஆண்டு நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டங்களை 50% குறைக்க வேண்டும்.

அதேபோல சிபிஎஸ்இ பொதுத் தேர்வு மே 2021-ம் ஆண்டுக்கு முன்பாக நடத்தப்படக் கூடாது. ஏனெனில் தேர்வுகளைத் தள்ளி வைத்தால் மாணவர்கள் படிப்பதற்கு அதிக நேரம் கிடைக்கும்’’ என்று மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

வழக்கமாக சிபிஎஸ்இ 12- வகுப்புப் பொதுத் தேர்வுகள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்