‘இந்து தமிழ் திசை’, ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’ நடத்தும் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான ‘ஆளப் பிறந்தோம்’ ஆன்லைன் வழிகாட்டு நிகழ்ச்சி: இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது

By செய்திப்பிரிவு

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து வழங்கும் ‘ஆளப் பிறந்தோம்’ எனும் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான ஆன்லைன் வழிகாட்டு நிகழ்ச்சி இன்று (அக்டோபர்-11, ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றிபெற வேண்டுமென்ற ஆசை பலருக்கும் உண்டு. இந்தத் தேர்வுகளுக்குப் படிப்பதற்கான தெளிவைத் தரும் நோக்கில் ‘ஆளப் பிறந்தோம்’ என்றஆன்லைன் வழிகாட்டு நிகழ்ச்சிநடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளும், யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராகும் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக இரயில்வே டிஜிபி மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை இயக்குநருமான டாக்டர் சி.சைலேந்திர பாபு ஐபிஎஸ், மேகாலயா மாநிலம் சாய்ஹா மாவட்ட ஆட்சியர் கேசவன் ஐஏஎஸ், சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரையாற்ற இருக்கிறார்கள்.

பதிவு கட்டணம் கிடையாது

காலை 10.30 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்ச்சி மதியம் ஒரு மணிவரை நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்கலாம். பதிவுக் கட்டணம் ஏதுமில்லை. இந்த நிகழ்வில் பங்குபெற https://connect.hindutamil.in/event/44-alapiranthom.html என்ற லிங்கில் பதிவுசெய்து கொள்ளவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

28 mins ago

ஜோதிடம்

34 mins ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்