1.50 லட்சம் பேர் எழுதிய பிரதான தேர்வு முடிவு வெளியீடு; ஜேஇஇ தேர்வில் 43,204 பேர் தேர்ச்சி: சென்னை மண்டல மாணவர் தேசிய அளவில் 2-ம் இடம்

By செய்திப்பிரிவு

ஜேஇஇ பிரதான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் சென்னை மண்டல மாணவர் கங்குலா புவன் ரெட்டி 350 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் 2-ம் இடம் பெற்றுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் 1 முதல் 6-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில் 6.35 லட்சம் பேர் கலந்துகொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கான பிரதான தேர்வு செப்.27-ல் நடைபெற்றது. இத்தேர்வை நாடு முழுவதும் 1.50 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

இந்நிலையில், ஜேஇஇ பிரதான தேர்வின் முடிவுகள், இணையதளத்தில் (https://jeeadv.ac.in) நேற்று வெளியிடப்பட்டன. அதன்படி, தேர்வு எழுதியதில் 6,707 மாணவிகள் உட்பட மொத்தம் 43,204 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த மாணவர் சிராக் ஃபலூர் மொத்தம் உள்ள 396-க்கு 352 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். சென்னை ஐஐடி மண்டலத்தை சேர்ந்த மாணவர் கங்குலா புவன் ரெட்டி 350 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் 2-வது இடம் பெற்றுள்ளார். மாணவிகளில் கனிஷ்கா மிட்டல் 315 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். சென்னையை சேர்ந்த மாணவர் ஜெய் முரேகர், தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளதாக தனியார் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது. டாப் 500 தரவரிசை பட்டியலில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை சேர்ந்த 140 பேர் இடம்பெற்றுள்ளனர்.

ஜேஇஇ பிரதான தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி, 31 என்ஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் தற்போது தொடங்கியுள்ளன. மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அக்.12 முதல் நவம்பர் 9-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த கலந்தாய்வில் பங்கேற்க https://josaa.nic.in இணையத்தில் இன்று முதல் பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

23 mins ago

ஜோதிடம்

30 mins ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

கல்வி

9 hours ago

மேலும்