‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்வில் எம்பிஏ படிப்பு குறித்து நிபுணர்கள் இன்று உரை

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பள்ளி, கல்லூரிமாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை இணையம் வழியாக முன்னெடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், டெக்னாலஜி அண்ட் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் (‘விஸ்டாஸ்’) உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

பிளஸ் 2-வுக்குப் பிறகு எங்கு,என்ன படிப்பது, எந்த படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என பல கேள்விகள், குழப்பங்களோடு நிற்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்த இணையவழி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இன்று மாலை 4 மணிக்கு

இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வில், கொச்சி சேவியர் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் அண்ட் ஆன்டர்பிரனர்ஷிப் இயக்குநர் டாக்டர் என்.நந்தகோபால், எல்ஐசிதெற்கு பிராந்திய மண்டல மேலாளர் கே.கதிரேசன், பெங்களூரு டிசிஎஸ் மனிதவள அலுவலர் நர்மதா, சென்னை ‘விஸ்டாஸ்’ ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் தலைவர், பேராசிரியர் டாக்டர் எஸ்.பிரீதா ஆகியோர் கலந்துகொண்டு எம்பிஏ படிப்பு தொடர்பான பயனுள்ள தகவல்களை பகிர்ந்துகொள்கின்றனர்.

இதில் பங்கேற்க கட்டணம் கிடையாது. அனைவரும் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள், பெற்றோர் https://connect.hindutamil.in/event/35-uuk.html என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

52 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வலைஞர் பக்கம்

24 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்